சுடச்சுட

  தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் நடைபெற்ற கலைப்போட்டிகளில் வென்றோர்

  By DIN  |   Published on : 09th November 2016 08:38 AM  |   அ+அ அ-   |  தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்

   

  தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் 2016-2017 -ஆம் ஆண்டில் பள்ளி மாணவர்களுக்காக நடத்தப்பட்ட கலைப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களின் பட்டியலை மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
  இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் சு. கணேஷ் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
  தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் 2016-2017 ஆம் ஆண்டுக்கான புதுக்கோட்டை,அறந்தாங்கி கல்வி மாவட்ட அளவில் கடந்த 2.11.2016 (புதன்கிழமை) மேனிலைப்பள்ளி  11,12-ஆம் வகுப்பு பயிலும் இருபால் மாணவர்களுக்கும் கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகள் நடத்தப்பட்டன.
  புதுக்கோட்டை மாட்சிமை தங்கிய மன்னர் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற போட்டிகளுக்கு ஒவ்வொரு பள்ளியிருந்தும் தலா 3 மாணவர்கள் வீதம் 100 -க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். போட்டிகளை, தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் நீ. மேகநாதன் முன்னிலையில், மன்னர் கல்லூரி முதல்வர் ஆர். தியாகராஜன் தொடக்கிவைத்தார்.
  புதுகை அரசு ராணியார் மகளிர் மேல்நிலைப்பள்ளி, தமிழாசிரியர் இரா. முத்துக்கருப்பன், மச்சுவாடி, அரசு முன்மாதிரி மேல்நிலைப்பள்ளித் தமிழாசிரியர் மா. எழிலரசி, சந்தைப்பேட்டை அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி தமிழாசிரியர் மு. பரமசிவம் ஆகியோர் நடுவர்களாக இருந்து பரிசுக்குரியவர்களைத் தேர்வு செய்தனர்.
  கவிதைப் போட்டியில் புதுகை ராணியார் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவி ரெ. ரோஜாஸ்ரீ முதல் பரிசு (10,000),ஆலங்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்  க. ராமலிங்கம் 2-ம் பரிசு (ரூ.7,000), கடியாபட்டி உலகப்பர் மேல்நிலைப்பள்ளி மாணவி ரெ.அகிலா 3-ம் பரிசு (ரூ.5000) வென்றனர்.
  கட்டுரைப் போட்டியில், அம்மாப்பட்டினம், அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி  செ. சீமாட்டிசஸ்மினா (ரூ.10,000) முதல் பரிசும்,சந்தைப்பேட்டை அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவி சி. ராஜலெட்சுமி (ரூ.7,000) 2-ம் பரிசும், மறமடக்கி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி த. சங்கீதா (5,000) 3-ம் பரிசும் வென்றனர்.
  பேச்சுப்போட்டியில், ராணியார் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவி சி. கடல்அரசி (ரூ.10,000) முதல் பரிசும், வடகாடு அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி த.மு. ரோஜா(7,000) 2-ம் பரிசும், திருஇருதய பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி செ. ஜோதி(ரூ.5,000) 3-ம் பரிசும் வென்றனர்.
  வெற்றி பெற்ற மாணவிகளுக்கு வரும் நாள்களில் நடைபெறும் விழாவில் ரொக்கப்பரிசுகள் வழங்கப்படும்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai